ஹட்டன் – கொழும்பு வீதியுடனான போக்குவரத்து கினிகத்ஹேன பகுதியில் ஒரு வழிபோக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனுடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.