கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வடகிழக்கில் மக்களை ஒன்றுதிட்டி அரசாங்கத்திற்கு ஒரு பதிலைசொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லையென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார்.
மயிலந்தனை மற்றும் மாதவனைப் பகுதிகளில் காணப்படும் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்கான கால்நடை மேச்சல் தரைக் காணிகள் அம்பாறை மற்றும் பொலன்னறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை தமிழருக்குரிய கால்நடைகள் சுட்டுக்கொல்லப்படுகின்றன.இதன் காரணமாக மட்டக்களப்பை சேர்ந்த கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மௌனமாக இருப்பதுடன் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் இவ்விடயம் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப் பண்ணையாளர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.