வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.