முல்லைத்தீவு வித்யானந்தா மகா வித்தியாலய மைதானத்திற்கு அருகில் 5 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (01) கல்லூரி மைதானத்தின் வேலி எல்லையை துப்பரவு செய்யும் போது குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முள்ளியவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரின் அனுசரணையுடன் கல்லூரிக்கு அருகில் உள்ள குறித்த மோட்டார் குண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் குண்டுகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.