இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்தநிலையில்,திருகோணமலையில் இந்திய அரச வங்கியொன்றின் கிளை ஒன்று, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்கான வைப்பு புத்தகத்தினை நிர்மலா சீதாராமன், செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.
இதனை தொடர்ந்து, இந்திய நிதியமைச்சர், இன்றைய தினம் மாலை நாம் 200 என்ற தேசிய நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.