தந்தை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த 15 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்புரிவதால் தந்தையின் பராமரிப்பில் சிறுமி இருந்துள்ளார்.
இந்நிலையில், தந்தை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.