கடந்த 2017-ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார்.
ரத்னகுமார் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருந்தார்.
மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கும் இணை எழுத்தாளராக இருந்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்இ ‘எழுதுவதற்காக ஆஃப் லைன் செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.