நாடாளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதனை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஒக்டோபர் 19 ஆம் திகதி நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.