Saturday, February 14, 2026
25 C
Colombo
வடக்கு30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு

30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு

வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று பொலிஸாரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சிலையின் எடை 35 கிலோ என தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது.

சிலையை கடத்தி வந்தவர் தப்பி தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்து சென்றுள்ளார்.

சிலை கைப்பற்றப்பட்டு யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles