Tuesday, July 29, 2025
25.6 C
Colombo
வடக்குயாழ். போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திரச்சிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திரச்சிகிச்சை

லண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை நிகழ்வு நேற்று (30) ஆரம்பமாகியது.

கண் சிகிச்சை நிலையப்பிரிவில் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட வைத்திய நிபுணர் எஸ்.மலரவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.

கண் சிகிச்சை நிலையத்தின் வைத்திய குழாமினால் நேற்று 270 இலவச கண்புரை சத்திரச்சிகிச்சைகள்
முன்னெடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எனவே எதிர்வரும் 05 நாட்களில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளமுடியும் என வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையப்பிரிவின் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட வைத்திய நிபுணர் எஸ்.மலரவன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles