இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
குறித்த மனு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அவர் இலங்கை பிரஜையா இல்லையா? என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விசாரணைகள் தற்போது நிறைவடைந்திருப்பதாகவும், இன்று பிற்பகல் 1.30க்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.