Monday, May 12, 2025
29.2 C
Colombo
சினிமாஇயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அதிரடி முடிவு

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அதிரடி முடிவு

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

பல வெற்றிகரமான படங்களை வழங்கிய அவர் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ‘திரையரங்குகளுக்காக படங்கள் இயக்குவதை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது. அதை நான் நேற்று அடையாளம் கண்டுள்ளேன். நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள், வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் அதிகபட்சம் ஓடிடி-க்காக இயக்குவேன்.

நான் சினிமாவை விட்டு விலக விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது அல்லது கணிக்க முடியாத வாழ்க்கை இடைவேளை பஞ்ச் போன்ற ஒரு திருப்பத்தைக் கொண்டுவருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles