Monday, July 28, 2025
26.7 C
Colombo
வடக்குவவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி

வவுனியா மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நபரே மரணித்துள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles