வவுனியா – செட்டிக்குளம் – அடியபுளியங்குளம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன.
சுமார் 15 மற்றும் 20 வயதுடைய இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குறித்த இடத்திற்கு அருகில் பல காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.