மில்கோ நிறுவனத்தின் தலைவரை பணயக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை தலா 500,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சினையின் காரணமாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவை இவர்கள் பணயக் கைதியாக வைத்திருந்தனர்.
பின்னர், பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்து ரேணுக பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மில்கோ நிறுவனத்தின் 13 ஊழியர்களை நேற்றிரவு கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.