வவுனிக்குளத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
வவுனிக்குளதில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் இன்று அதிகாலை 2.00 மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன.
எனவே மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழல் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கைப்பற்ற வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.