ஏறாவூர் – சவுக்கடியில் மீனவர்களின் வலையில் 3,000 கிலோகிராம் எடை கொண்ட இராட்சத புள்ளி சுறா ஒன்று சிக்கியுள்ளது.
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் வலையில் பிடிபட்ட குறித்த சுறா வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இது அரிதான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.