நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற மோதலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (20) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா நாடாளுமன்ற வளாகத்தில் தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சபாநாயகர் விசேட குழுவையும் நியமித்துள்ளார்.