Friday, May 9, 2025
31 C
Colombo
மலையகம்பேருந்தில் பயணித்த நபர் உயிரிழப்பு (Photos)

பேருந்தில் பயணித்த நபர் உயிரிழப்பு (Photos)

கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

திக்ஓய – பட்டலகல பகுதியை சேர்ந்த இரு பிள்கைளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்து தொற்றா நோய் ஒன்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வீட்டிலிருந்து வெளியேறிய அவர் இன்று மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்புவதற்காக பேருந்தில் பயணிக்துக் கொண்டிருந்த நிலையில் இவ்வாறு மரணித்துள்ளார்.

அவர் பேருந்திலிருந்து இறங்காமல் இருப்பதால் சந்தேகமடைந்த பயணிகள் சாரதி மற்றும் நடத்துனருக்கு அறிவித்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஹட்டன் பொலிஸாரின் அறிவுரைக்கமைய, உயிரிழந்தவரின் சடலம் அதே பேருந்தில் திக்ஓய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles