Thursday, January 16, 2025
24.5 C
Colombo
அரசியல்தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயனா குற்றச்சாட்டு (Video)

தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயனா குற்றச்சாட்டு (Video)

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நூலகத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட இந்த மோதலால் மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் இந்த சம்பவத்தை பதிவு செய்திருந்த நிலையில், டயனா கமகே மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

தன்னை தாக்கிய நளுமhடான்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles