அகில இலங்கை ரிதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது.
இதற்கான பாராட்டு விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பங்கிபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அரச அதிபரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.