Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
மலையகம்ஒன்றரை வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா கைது

ஒன்றரை வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா கைது

ஒன்றரை வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனுகல சோலன்ட் தோட்ட கீழ் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி காலை, சந்தேக நபரின் மனைவி தெஹிகஹவத்தை -கொட்டல்பெத்தவில் வசிக்கும் தனது மகனின் வீட்டிற்கு சென்று, மதியம் வீடு திரும்பும் போது, தனது ஒன்றரை வயது பேத்தியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் மாலையில் சிறுமி தனது தாத்தாவுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பாட்டி தோட்டத்தில் விறகு வெட்டச் சென்ற போது சிறுமியின் தந்தை மகளை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வந்துள்ளார்.

பெற்றோரின் வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ​​தன் தந்தையால் (தாத்தா) தன் மகள் வன்புணரப்படுவதை அவதானித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, சந்தேக நபரை அடித்து, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இரண்டு நாட்களின் பின்னர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை லுணுகல பொலிஸுக்கு சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

மகன் தன்னை தாக்கியதாக கூறி சந்தேக நபர், லுணுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வயோதிப தந்தை பதுளை வைத்தியசாலையின் 8 ஆம் இலக்க வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படும் வரை சந்தேகநபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக லுனுகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles