Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
வடக்குஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க. நிதர்சன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கு மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம.நியூட்டன் அணிவித்தார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles