முல்லைத்தீவு மாங்குளம் ரயில் நிலையத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பலதரப்பட்டவர்களின் முயற்சியினால் தற்போது சாத்தியமாகியுள்ளதாகவும், மேலும் ஆசன கருமபீடமும் விரைவில் அமைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி 05.10 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 க்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும் ( ஒவ்வொரு சனிக்கிழமைகளில்)
யாழ் நிலா இரவு 22 00 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்(வெள்ளிக்கிழமை மட்டும்)
காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி ரயில் மாங்குளத்திற்கு 14.54 ற்கு வந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லும்( ஞாயிறு மட்டும்)
யாழ்நிலா ரயில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 21.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 23.20 க்கு வந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும். (ஞாயிறு மட்டும்)
இதனைவிட ஏற்கனவே நிறுத்தப்பட்டுவந்த அனைத்து ரயில்களும் வழமைபோல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது