கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள், நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் அவர்கள் ஒன்று திரண்டு இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீண்ட காலமாக நிரந்தர நியமனம் இன்றி தற்காலிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி வருகின்றோம். தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு தற்காலிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது. தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்து விட்டு கண்டி பிரதான வீதியூடாக ஆளுநர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.