Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
வடக்குவடக்கு - கிழக்கில் வெள்ளியன்று பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க முஸ்தீபு

வடக்கு – கிழக்கில் வெள்ளியன்று பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க முஸ்தீபு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) மாலை மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு நீதி சரவணராஜா மீதான அச்சுறுத்தல் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இந்த நாட்டில் இடம் பெற்று வருகின்ற போதும் உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles