Saturday, August 30, 2025
27.2 C
Colombo
வடக்குதவறான முடிவெடுத்த இரு மாணவிகள்

தவறான முடிவெடுத்த இரு மாணவிகள்

கிளிநொச்சி – பெரியபரந்தனில் இரு சிறுமிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

‘எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை’ என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 வயதுடைய சிறுமிகளே வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலங்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles