நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றக் குழுவில் அச்சுறுத்தும் ஒலிப்பதிவை வெளியிட சபாநாயகர் கடமைப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நாடாளுமன்றக் குழுவில் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான ஒலிப்பதிவு மேலதிக நடவடிக்கைகளுக்காக தமக்கு அவசியம் என்றார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்றக் குழுக்களின் ஒலிப்பதிவுகளை வெளியிட முடியாது என கூறினார்.
இதேவேளை, தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.