Sunday, September 7, 2025
31.1 C
Colombo
வடக்குரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்தில் வீழ்ந்து மரணம்

ரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்தில் வீழ்ந்து மரணம்

ரயிலில் ஏற முற்பட்ட போது, தவறி கீழே வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.

சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு ரயில் நிலையத்திலிருந்து குறித்த நபர் ரயிலில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர், உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles