மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையின் தோலின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேல் உள்ள காசல்ரீ லெடண்டி தோட்டத்தின் தேயிலை தோட்டத்தின் நடுவில் உள்ள முட்புதரில் இறந்து கிடந்த சிறுத்தையின் சடலம் ஒன்று இருப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய தகவலையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
ஒன்றரை வயதுடைய சிறுத்தையின் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அது பெண் சிறுத்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தையின் சடலம் இன்று (13) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெற்று சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.