யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஸ்டாலி மாவத்தையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 65 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் சுமார் 05 அடி 05 அங்குல உயரமும், மெலிந்த உடலும் கொண்டவர். இறக்கும் போது அவர் நீல நிற மேலாடையுடன் பழுப்பு நிற சேலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.