Thursday, January 16, 2025
24.2 C
Colombo
வடக்குமனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய நபருக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை

மனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய நபருக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை

மனைவியின் 14 வயது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சிறுமிக்கு ஆறு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும்இ நட்டஈடு வழங்கப்படாவிட்டால் மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை நீடிக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

விசாரணையில்இ கடந்த 2014ம் ஆண்டு சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளதும், பின்னர் கணவன், மனைவியாக ரகசியமாக அவருடன் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதுடன், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் மரபணுக்கள் சந்தேக நபரின் மரபணுக்களுடன் ஒத்துப் போயுள்ளது.

இது தொடர்பில், சிறுமியின் உறவினர்கள் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles