கந்தளாய் பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நடு வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கடமையை முடித்துக் கொண்டு கந்தளாய் பகுதிக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.