தந்தை நாட்டின் ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரிய தலைமைத்துவம் உரிய காலத்தில் உருவாகும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்கள் தீர்மானிப்பதாகவும், அதற்கமைய தொகுதி சபைக் கலந்துரையாடலின் போது தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.