இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கையில் ஒரு வினாடி கூட இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறிது காலமாக இந்திய இழுவைப் படகுகளின் வரவு குறைவாகக் காணப்படுகிறது.
எமது கடற்தொழிலாளர்கள் இந்தியாவிற்கு படகில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து தமது நிலைமையை விளங்கப்படுத்தியதன் விளைவால் தான் இந்தியப் படகுகளின் வருகை குறைவடைந்துள்ளது.
இது இலங்கை கடற்படை சார்ந்த பிரச்சனை அல்ல. வடக்கில் வாழும் தமிழ் கடற்தொழிலாளர்களுடைய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.