Sunday, November 17, 2024
24 C
Colombo
அரசியல்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய தலைமை வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய தலைமை வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?” என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லையென பதிலளித்துள்ளார்.

சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்- “மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?”

மஹிந்த- “இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என நினைக்கிறேன். முன்னேற்றத்திற்கு புதிய ஒரு தலைமை வேண்டும்”.

ஊடகவியலாளர்- “மக்கள் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். நீங்கள் இப்பிரச்சினையில் மக்களின் பக்கம் நிற்பீர்களா?”

மஹிந்த- “இந்த நிலைமையில் மக்களுக்கு உதவுவது அவசியமென நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளளோம். நிச்சயமாக நாம் மக்களின் பக்கம் நிற்போம். நாங்கள் எப்போதும் மக்களின் தான் நின்றோம்”.

ஊடகவியலாளர்- “உண்மையை சொன்னால் உங்களின் ஆட்சியின் போது மக்கள் இந்தளவுக்கு பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. நிலைமை அப்போது சிறப்பாக இருந்தது”.

மஹிந்த- ”உண்மைதான். நீங்களே அதை சொன்னால் அது உண்மை தான்”

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles