Saturday, May 30, 2026
31.7 C
Colombo
சினிமா32 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியுடன் கைகோர்க்கும் அமிதாப் பச்சன்

32 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியுடன் கைகோர்க்கும் அமிதாப் பச்சன்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படம் தயாராகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார்.

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

1991-ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles