Saturday, May 30, 2026
31.7 C
Colombo
சினிமாஹெரிபொட்டர் புகழ் டம்பள்டோர் காலமானார்

ஹெரிபொட்டர் புகழ் டம்பள்டோர் காலமானார்

ஹெரிபொட்டர் திரைப்பட பாகங்களில் ‘டம்பள்டோர்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரிட்டிஷ்-ஐரிஷ் நடிகரான மைக்கேல் காம்பன் தனது 82 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி மற்றும் நாடகம் என பல தசாப்தங்களாக நடித்து வரும் காம்பன் நான்கு தொலைக்காட்சி பிஏஎப்டிஏ விருதுகளையும் ஆலிவர் விருதையும் வென்றுள்ளார்.

நியுமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles