Sunday, October 19, 2025
25 C
Colombo
சினிமாமற்றுமொரு சர்ச்சையில் சிக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்

கடந்த 2018-ஆம் ஆண்டு ‘அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா’ என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை முன்பதிவு செய்து 29 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடக்காததால் முன்பணமாக கொடுத்த தொகையை குறித்த நிறுவனம், ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டுள்ளது.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் காசோலை ஒன்றை கொடுத்துள்ளதுடன், அந்த காசோலை செல்லுபடியாகாமல் இருந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானிடமும் அவரது மேலாளரிடமும் பல முறை இது தொடர்பில் கூறியும் பதில் கிடைக்காததால், இது தொடர்பாக அந்த நிறுவனம் பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகாரிளித்துள்ளது.

அந்த புகாரில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles