Thursday, July 3, 2025
28.4 C
Colombo
சினிமா'புஷ்பா 2' படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

‘புஷ்பா 2’ படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அத்துடன், அண்மையில் புஷ்பா கதாபாத்திரத்துக்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்pலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles