அரசியலில் உள்ள கிருமிகளை மக்களே கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் நீரோட்டத்தில் பல கிருமிகள் இருப்பதாகவும், அந்த கிருமிகள் சமூகத்தின் நலனுக்கு கேடு விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.