Thursday, December 18, 2025
25 C
Colombo
சினிமாலியோ படப்பிடிப்பை நிறைவு செய்தார் விஜய்

லியோ படப்பிடிப்பை நிறைவு செய்தார் விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ‘லியோ’ திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘தளபதி 68’ படத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles