Sunday, September 14, 2025
31.1 C
Colombo
சினிமா'நா ரெடி' பாடலால் சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்

‘நா ரெடி’ பாடலால் சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்மையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் பாடலும், முதற் பார்வை போஸ்டரும் வெளியாகின.

இப்படத்தின் முதல் பாடலான ‘ஆல்டர் ஈகோ நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானசில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

மேலும் நா ரெடி பாடல் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்இ ‘லியோ’படத்தின் ‘நா ரெடி தான் வரவா’பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரௌடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles