Monday, March 16, 2026
26.1 C
Colombo
ஏனையவைவாகன விபத்தில் இளைஞர் பலி

வாகன விபத்தில் இளைஞர் பலி

தெல்கொட – தொம்பே வீதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொம்பேயிலிருந்து தெல்கொட நோக்கி பயணித்த பேருந்து, எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடுப்பில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன, மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles