அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி அரசினால் வழங்கப்படும் சிறுநீரக நோயளர்களுக்கான நிதியுதவி, முதியோர் உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகள் எவ்வித வெட்டுமின்றி வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.