Tuesday, March 18, 2025
24 C
Colombo
அரசியல்டொலர் நெருக்கடியே வரி அதிகரிப்புக்கு காரணம் - தம்மிக்க பெரேரா

டொலர் நெருக்கடியே வரி அதிகரிப்புக்கு காரணம் – தம்மிக்க பெரேரா

டொலர்களை கொண்டுவருவதற்கான நிலையான பாதையை இலங்கை இன்னும் உருவாக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை, மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் நிலவும் வரி நெருக்கடிக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என தெரிவித்தார்.

டொலரின் பற்றாக்குறை காரணமாக, இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் சுங்க வரி மற்றும் ஏனைய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

“சுங்க வரிகள் மற்றும் வரிகளில் இருந்து இழந்த பணத்தை சம்பாதிப்பதற்காக, மற்ற வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால் உள்ள அடிப்படை பிரச்சினை டொலர் பற்றாக்குறையாகும். டொலர்களை சம்பாதிக்க இன்னும் சரியான வழியை இலங்கை தேடவில்லை” என்று அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles