காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளித்த வெளிநாட்டு குழு யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் மட்டுமல்ல, போராட்டக்காரர்களுடன் இணைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியும் போராட்டத்தில் வெளிநாட்டு குழுவொன்றுக்கு பங்கு இருப்பதாக இப்போது கூறுகின்றது .
எங்களுடன் இருந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் கூட இந்த விவரங்களை அம்பலப்படுத்தி புத்தகம் எழுதியுள்ளார்.
ஜே.வி.பி போராட்டத்தில் ஒரு பகுதி உறுப்பினர்களாவர். எனவே அவர்களே இப்போது அதன் பின்னணியில் சில வெளிநாட்டு குழுக்கள் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது போராட்டக்காரர்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே இருக்கின்றது. போரட்டம் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.