Monday, December 22, 2025
32.2 C
Colombo
சினிமாநடிகர் சரத் பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்

நடிகர் சரத் பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல நடிகர் சரத்பாபு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (வயது 71).

உடல்நலம் குன்றிய சரத்பாபு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த 20ஆம் திகதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு “வென்டிலேட்டர்” மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்புதான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles