கே- பொப் இசைக்குழுவான ஆஸ்ட்ரோ உறுப்பினர் மூன் பின் என்ற பாடகர் நேற்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தென் கொரிய பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான சூம்பி தெரிவித்துள்ளது.
25 வயதான மூன்பின், நேற்றிரவு சுமார் 8.10 மணியளவில் சியோலில் கங்னம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்திருப்பதை அவரின் மேலாளர் அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அவரது மரணத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இது தற்கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மூன் பின் 2016 பெப்ரவரி 23 ஆம் திகதி கே- பொப் பாடகராக அறிமுகமானார். அவர் இளம் வயதிலேயே நடிக்கத் ஆரம்பித்துடன், பிரபல கே-டிராமாவான ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்’ இல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.