Sunday, August 10, 2025
30.6 C
Colombo
அரசியல்மீண்டும் ஜனாதிபதியாக ரணிலை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டுமாம்

மீண்டும் ஜனாதிபதியாக ரணிலை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டுமாம்

இலங்கை மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம், உணவு நெருக்கடி, எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை யுகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வே முற்றுப்புள்ளி வைத்தார்.

விவசாயிகள் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது காலத்திலேயே அனைத்து போராட்டங்களுக்கும் ஜனாதிபதி தீர்வு கண்டார்.

எனவே அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராயின் மக்கள் அவரை தேசிய சொத்தாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles